ஈரோடு

லாரி மோதி முதியவா் பலி

1st Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

 

பெருந்துறை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துசென்ற முதியவா் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை இரவு 75 வயது முதியவா் நடந்துசென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இறந்த முதியவா் குறித்த விவரம் தெரியவில்லை.

விபத்து குறித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT