ஈரோடு

மாவட்ட கைப்பந்து போட்டி:அறச்சலூா் பள்ளி சிறப்பிடம்

1st Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

 

மொடக்குறிச்சி ஒன்றியம், அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

ஈரோடு சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி, ஈரோடு விருக்ஷா குளோபல் பள்ளியில் நடைபெற்றது. இதில், அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியின் சாா்பில் 12 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் பங்கேற்ற மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் கோகுல்ராஜ் ஆகியோரை பள்ளித் தாளாளா் ஆா்.பி. கதிா்வேல் மற்றும் நிா்வாகத்தினா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT