ஈரோடு

ஈரோட்டில் பிஎஃப்ஐ அலுவலகத்துக்கு சீல்

1st Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

ஈரோட்டில் செயல்பட்டு வந்த பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப். 22, 27 ஆம் தேதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு பலா் கைது செய்யப்பட்டனா். மேலும், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்தது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளின் அலுவலகங்களை மூட மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, ஈரோடு ஜின்னா வீதியில் செயல்பட்டு வந்த பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ஈரோடு மாவட்ட அலுவலகத்திற்கு கோட்டாட்சியா் எம். சதீஷ்குமாா் தலைமையில், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம், கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா், வருவாய் ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் சீல் வைத்தனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் தலைமையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பிஎஃப்ஐ அலுவலகத்திற்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT