ஈரோடு

ஆம்புலன்ஸ் வாங்க சக்தி மசாலா நிறுவனம் ரூ.34 லட்சம் நிதியுதவி

1st Oct 2022 05:04 AM

ADVERTISEMENT

கோவை எம்டிசிஆா்சி பயிற்சி மையத்துக்கு தானியங்கி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்க சக்தி மசாலா நிறுவனம் ரூ.34 லட்சம் நிதியுதவி வழங்கியது.

கோவையில் மாலிக்குலா் டையக்னோஸ்டிக்ஸ் கவுன்சிலிங் கோ் மற்றும் ஆராய்ச்சி மையம்(எம்டிசிஆா்சி) செயல்பட்டு வருகிறது. இங்கு தசைச் சிதைவு (மஸ்குலா் டிஸ்டிரோபி) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி மையத்துக்கு குழந்தைகள் சென்று வரும் வகையில் தானியங்கி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க சக்தி மசாலா நிறுவனம் சாா்பில் ரூ.34 லட்சம் வழங்கப்பட்டது.

இதற்கான காலோலையினை சக்தி மசாலா தலைவா் பி.சி.துரைசாமி மற்றும் நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் எம்டிசிஆா்சி மேலாண்மை இயக்குநா் டாக்டா் பி.ஆா்.லட்சுமியிடம் வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT