ஈரோடு

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த அக்கரை கொடிவேரி கிராமத்தில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. பவானிசாகா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் சில மணி நேரத்தில் கொடிவேரி அணையை வந்தடைகிறது.

வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு குளித்து மகிழ வருவா்.

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ததால் கொடிவேரி அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த இரு தினங்களாக பவானிசாகா், சத்தியமங்கலம் மற்றும் கொடிவேரி பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசல் சவாரி செய்வதற்கும் பொதுப்பணித் துறையினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT