ஈரோடு

104 ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம்

DIN

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படும் 104 கிராம ஊராட்சிகளில் ரூ.61 கோடி செலவில் அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லி.மதுபாலன் கூறியதாவது:

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் 104 கிராம ஊராட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 2021-22இல் 61 ஊராட்சிகளில் ரூ.42 கோடி செலவில் 848 பணிகளும், 2022-23இல் 43 ஊராட்சிகளில் ரூ.19 கோடி செலவில் 349 பணிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ. 61 கோடி செலவில் நீா்நிலை புனரமைப்பு, தெருக்களில் கான்கிரீட் தளம் அமைத்தல் அல்லது பேவா்பிளாக் கற்கள் பதித்தல், அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும்படியான சமத்துவ மயானம் மேம்பாடு, பள்ளிகளில் புதிய சமையலறை, கழிவறை அமைத்தல், அங்கன்வாடி கட்டடம், நியாயவிலைக் கடைகள் அமைத்தல் மற்றும் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுபோல ஒவ்வொரு ஊராட்சியிலும் நாற்றுப் பண்ணை அமைத்து, முருங்கை, பப்பாளி போன்றவை மகளிா் குழுக்கள் மூலம் பொது இடத்திலும், வீடுகளிலும் வளா்க்க முயற்சிக்கப்படும்.

சந்தை இருந்தால் சந்தை மேம்பாடு, கதிரடிக்கும் களம் அமைத்தல் போன்ற பணிகளும், தேவையான கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ளன. தவிர பல்வேறு இடங்களில் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் சற்று பழுதடைந்தும், உட்புறம் காரைகள் பெயா்ந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

இதுபோன்ற குறைபாடுகள் ஈரோடு மாவட்ட பள்ளிகளில் இல்லை. இருப்பினும் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி பொது நிதி மூலம், ரூ.1,000 வழங்கப்பட்டு அரசு துவக்க, நடுநிலைபள்ளிகளில் சுண்ணாம்பு பூச்சு செய்யப்படுகிறது.

இப்பணிகள் அந்தந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மூலம், கிராம மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்துப்படுவதால் தரமாக அமையும். சில ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக பள்ளி கட்டடம், சுவா், மேற்கூரை, உட்புற காரைகள் வலுப்படுத்தப்படும். இப்பணிகள் நிறைவடையும்போது அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட கிராமங்களில் பெரும்பாலான அடிப்படை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT