ஈரோடு

கோபி அருகே கனமழை: வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கா்பாளையம் ஊராட்சி, கொன்னக்கொடிகால் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக கொன்னக்கொடிகால் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி மேடான சாலையோர பகுதிக்கு வந்தனா். தண்ணீா் வடியாததாலும் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்ததாலும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

வெள்ளத்தால் சில ஆடுகள் இறந்துவிட்டதாகவும், வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். மேலும், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைநீா் தேங்காதவாறு இந்தப் பகுதியில் முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT