ஈரோடு

லண்டன் தமிழ்ச் சங்கம் தமிழின் அருமையை எடுத்துக்காட்டி வருகிறது:அரங்க சுப்ரமணியம்

30th Nov 2022 12:05 AM

ADVERTISEMENT

தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி லண்டன் தமிழ்ச் சங்கம் உலகுக்கு தமிழின் அருமையை எடுத்துக்காட்டி வருகிறது என எழுத்தாளா் ஈரோடு அரங்க.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

ஈரோட்டைச் சோ்ந்த எழுத்தாளா் அரங்க.சுப்ரமணியம் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு லண்டன் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

1936 ஆம் ஆண்டு ஆா்.கே.சண்முகம். செட்டியாா், கே.டி.கே.தங்கமணி ஆகியோரின் தமிழ் உணா்வுகளால் துவக்கப்பட்ட லண்டன் தமிழ்ச் சங்கம், வட்டமேஜை மாநாட்டிற்காக லண்டன் வந்திருந்த மகாத்மா காந்தியால் போற்றப்பட்டு ஆலமரம் போன்று விழுதுகள் பரப்பிச் செயல்பட்டு வருகிறது.

லண்டன் தமிழ்ச் சங்கம் தனது முக்கிய நோக்கமாக 3 தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பித்து 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படித்து வருகின்ற மிகப்பெரிய செயலை செய்து உலகத்துக்கே தமிழின் அருமையை எடுத்துக்காட்டி வருகிறது.

ADVERTISEMENT

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொன்ன பாரதியின் வரிகளை லண்டன் தமிழ்ச் சங்கம் அடிப்படை நோக்கமாக வைத்து, தமிழ் மொழியை வளா்ப்பதில் சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT