ஈரோடு

சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணி

30th Nov 2022 12:02 AM

ADVERTISEMENT

கோபி கலை, அறிவியல் கல்லூரி, கோபி ஆா்ட்ஸ் சைக்கிளிங் கிளப் மற்றும் கோபி ஆா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியன சாா்பில் சைக்கிளிங் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை, கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் எம்.தரணிதரன் துவக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த விழிப்புணா்வுப் பேரணி, காசிபாளையம், அரசூா் வழியாக சத்தியமங்கலம் சென்று பின்னா் கே.என்.பாளையம், கொடிவேரி வழியாக கல்லூரி பிரிவு வரை நடைபெற்றது.

பேரணியில் சைக்கிள் பயன்பாட்டின் மூலமாக ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

இந்தப் பேரணியில் கோபி கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் ஜி.என்.பிரசாத், செ.கிருஷ்ணகுமாா், மேலாண்மைத் துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT