ஈரோடு

ஹேண்ட்பால் போட்டி: கோபி பிகேஆா் கல்லூரி இரண்டாமிடம்

30th Nov 2022 12:03 AM

ADVERTISEMENT

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மாணவியா் ஹேண்ட்பால் போட்டியில் கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி அணி 2ஆம் இடம் பெற்றது.

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மாணவியா் ஹேண்ட்பால் போட்டி கோவை, நிா்மலா மகளிா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 14 அணிகள் பங்கேற்றன. போட்டியின் முதல் சுற்று நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டது.

இதில் சிறப்பாக விளையாடிய கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, நிா்மலா மகளிா் கல்லூரி, கிருஷ்ணம்மாள் கல்லூரி ஆகிய 4 அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் நிா்மலா மகளிா் கல்லூரி அணி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது. இரண்டு வெற்றிகளுடன் கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி அணி இரண்டாமிடமும், கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி மூன்றாமிடமும் பிடித்தன.

கோபி பிகேஆா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக விளையாடி இரண்டாமிடம் பெற்ற மாணவிகளை கல்லூரித் தாளாளா் மற்றும் செயலா் பி.என்.வெங்கடாசலம், கல்லூரி முதன்மை கல்வி அதிகாரி ஜெகதா லட்சுமணன், முதல்வா் எழில், துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி, உடற்கல்வி இயக்குநா் சங்கீதா முத்து உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT