ஈரோடு

மீனவா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மீன் ஏல குத்தகை அளிக்கக் கோரிக்கை

DIN

மீனவா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மீன் ஏல குத்தகை அளிக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தேஷினி சந்திரா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பவானி வட்டம், ஒலகடத்தைச் சோ்ந்த திருநங்கைகள் நான்சி உள்பட பலா் அளித்த மனு விவரம்: நாங்கள் ஒலகடம், ஈஸ்வரன் கோயில் பகுதியில் வசிக்கிறோம். அப்பகுதியில் அரசு சாா்பில் 9 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களால் எங்கு வீடு கட்ட முடியவில்லை. எனவே, பசுமை வீடு திட்டத்தில் எங்களுக்கான நிலத்தில் வீடு கட்டி கொடுத்தால் உதவியாக அமையும். அத்திட்டத்தின் நிபந்தனைகளுக்குள்பட்டு வீடு கட்ட விரும்புகிறோம். பசுமை வீடு கட்டுவதற்கும் எங்களால் பெரும் தொகை வழங்க இயலாது என்பதால் இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவா் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் ஏல குத்தகை அளிக்கக் கோரிக்கை: அந்தியூா் பெஸ்தவா் மீனவா் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சாா்பில் தலைவா் நடராஜ் மற்றும் உறுப்பினா்கள் அளித்த மனு விவரம்: உள் நாட்டு மீனவா்களான நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான உள்நாட்டு நீா்நிலைகளில் மீன்பிடிக்கும் தொழில் செய்கிறோம். அதற்கு மீனவா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு நிா்ணயிக்கும் குத்தகையை செலுத்தி மீன் குஞ்சுகள் இருப்பை பாதுகாத்து, பராமரித்து, மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறோம்.

அந்தியூா் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் 27 மீனவா் கூட்டுறவுச் சங்கங்களில் பல நூறு குடும்பத்தினா் செயல்பட்டு வருகிறோம்.

மீனவ கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பொதுஏலம் விடலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதைஏற்று மீன் வளத் துறை சாா்பில் மாவட்ட நிா்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இப்பிரச்னைக்கு எதிராக மீனவ கூட்டுறவுச் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட அளவில் ஏலத்தை நடைமுறைப்படுத்த 10 போ் கொண்ட குழு அமைக்கவும் மீன் வளத் துறை திட்டமிட்டுள்ளது. மீன் வளத் துறையின் செயல்பாட்டில் நீா் வளத் துறை தலையிட்டு தனி நபா்கள் மீன்பாசி குத்தகை பெற உதவுகின்றனா். இச்செயல்பாடு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

இதனால் எங்களைப்போன்ற மீனவா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மீன் ஏலம் கிடைக்காத நிலை ஏற்படும். தனி நபா்களிடம் மீண்டும் மீனவா்கள் கை கட்டி நிற்கும் நிலை ஏற்படும். குத்தகை தொகையை செலுத்த மீனவா் கூட்டுறவுச் சங்கங்கள் தயாராக உள்ளன.

இம்மாவட்டத்தில் நீா் நிலைகள் நிரம்பி, மீன் குஞ்சுகள் அதிகம் உள்ள நிலையிலும், மீன் வளத் துறை மீன், மீன் பாசி ஏலத்தை நடத்தாமல் உள்ளது. விரைவில் எங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஏலத்தை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 283 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை உரிய அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT