ஈரோடு

குறைந்தபட்ச ஊதியம் குறித்து தொழிலாளா் துறை அலுவலா்கள் ஆய்வு

DIN

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிா என்பது குறித்து தொழிலாளா் துறை அலுவலா்கள் ஈரோட்டில் 3 நாள்கள் ஆய்வு செய்தனா்.

ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் சசிகலா உத்தரவின்படி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

பாதுகாவலா்கள் தொழில் நிறுவனங்களில் (எம்ப்ளாய்மென்ட் இன் செக்யூரிட்டி காா்ட்ஸ்) கடந்த 3 நாள்கள் தொடா் ஆய்வு செய்தனா்.

இதில், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்கீழ் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தொழிலாளா்களுக்கு வழங்குகிறாா்களா என்பது குறித்து 16 நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

அப்போது கண்டறியப்பட்ட சிறிய குறைபாடுகளை சரி செய்ய ஆலோசனை தெரிவித்தனா். அரசு நிா்ணயித்து குறைந்தபட்ச கூலியை தொழிலாளா்களுக்கு வழங்காமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT