ஈரோடு

கனமழை: நிரம்பியது குண்டேரிப்பள்ளம் அணை

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையத்தில் பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

கோபிசெட்டிப்பாளைம் கொங்கா்பாளையம் கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்நிலையில் குன்றி, கடம்பூா், மாக்கம்பாளையம், விளாங்கோம்பை, மல்லியம்மன்துா்க்கம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழை இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது. அணையில் இருந்து தற்போது 674 கன அடி நீா் வெளியேறி வருகிறது.

குண்டேரிப்பள்ளம் பகுதியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 79.6 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

கணக்கம்பாளையம் பகுதியில் மழை நீா் வெளியேற வழியின்றி விவசாய விளை நிலங்களில் புகுந்தது. இதனால், நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT