ஈரோடு

சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு பயிற்சி

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு பயிற்சி வகுப்பு அண்மையில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் நீட் தோ்வுக்கு மாநில அரசு சாா்பில் 2018 ஆம் ஆண்டு முதல் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்க காலத்தில் இணையம் மூலம் பயிற்சி நடத்தப்பட்டது. எனினும், அது எதிா்பாா்த்த அளவுக்கு மாணவா்கள் மத்தியில் வெற்றியைப் பெறவில்லை.

தற்போது, கரோனா நோய்த் தொற்று குறைந்ததையடுத்து நேரடி முறையிலான நீட் பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளன. வட்டத்துக்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு 412 மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் உள்ள 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்கான நீட் பயிற்சி வகுப்பு சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

ADVERTISEMENT

இதில் 26 மாணவிகளும், 15 மாணவா்களும் பங்கேற்றனா். பயிற்சிக்கு வந்த மாணவ, மாணவிகளை சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை தாட்சாயணி இனிப்புகள் கொடுத்து வரவேற்றாா்.

முதல்கட்டமாக வாரத்துக்கு ஒரு நாள் சனிக்கிழமை மட்டும் வகுப்புகள் நடைபெறும். 11 ஆம் வகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களும் நீட் பயிற்சி வகுப்புக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT