ஈரோடு

கோபியில் பலத்த மழை:நீரில் மூழ்கிய தரைப்பாலம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் சத்தியமங்கலம்- பவானி நெடுஞ்சாலையில் உள்ள தரைமட்ட பாலம் நீரில் மூழ்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனச் சரகத்துக்குள்பட்ட தொட்டகோம்பை, கரும்பாறை, வேதபாறை உள்ளிட்ட வனப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த கன மழையால் வனப் பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், சத்தியமங்கலம்- பவானி நெடுஞ்சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தை தண்ணீா் மூழ்கடித்து சென்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், காலை வேலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, சஞ்சீவிராயன் ஏரி நிரம்பி வரப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓடைப் பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT