ஈரோடு

கோபியில் ரூ. 7 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம்

DIN

கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாழைத்தாா் ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5,350 வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் கதளி கிலோ ரூ. 37க்கும், நேந்திரன் கிலோ ரூ. 34 க்கும் விற்பனையானது. மேலும், தாா் ஒன்றுக்கு பூவன் ரூ. 240 க்கும், தேன்வாழை ரூ. 460க்கும், செவ்வாழை ரூ. 540க்கும், ரொபஸ்டா ரூ. 310க்கும், மொந்தன் ரூ. 230க்கும், பச்சநாடான் ரூ. 300க்கும், ரஸ்தாளி ரூ. 450க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 18ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதே போல தேங்காய் ஏலத்துக்கு 4,490 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில் குறைந்தபட்ச விலையாக ரூ. 9க்கும் அதிகபட்சமாக ரூ. 16.20க்கும் ஏலம் போனது. மொத்த தேங்காய்களின் விற்பனை மதிப்பு ரூ.57,200 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT