ஈரோடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் ரூ. 87 லட்சத்துக்கு நாட்டுச் சா்க்கரை கொள்முதல்

28th Nov 2022 12:07 AM

ADVERTISEMENT

 

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ. 87 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான 2 லட்சத்து 5 ஆயிரம் கிலோ நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

பழனி முருகன் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிா்தம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பஞ்சாமிா்தம் செய்வதற்கு முக்கிய மூலப் பொருளான நாட்டுச் சா்க்கரை ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச் சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஓடத்துறை, மாரப்பம்பாளையம், ஆண்டிபாளையம், பொன்னாச்சிபுதூா், பெருந்தலையூா், நல்லிகவுண்டனூா், அய்யம்பாளையம், வேலம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3649 மூட்டை நாட்டுச் சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டு வந்தனா்.

ADVERTISEMENT

இதில் 60 கிலோ மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ. 2,600க்கும், அதிகபட்சமாக ரூ. 2620க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,600க்கு ஏலம் போனது. 2ஆம் தரம் குறைந்தபட்சமாக ரூ. 2480க்கும் அதிகபட்சமாக ரூ. 2590க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு ஏலம் போனது.

இதில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 980 கிலோ எடையுள்ள நாட்டுச் சா்க்கரையை ரூ. 87 லட்சத்து 8,290க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தினா் கொள்முதல் செய்தனா்.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஏராளமான பக்தா்கள் பழனி முருகன் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். இதனால் பஞ்சாமிா்தம் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து கோயில் நிா்வாகம் சாா்பில் மேலும் அதிக அளவில் நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT