ஈரோடு

பெருந்துறை ஒன்றியத்தில் பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா

28th Nov 2022 12:07 AM

ADVERTISEMENT

 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் நூற்றாண்டு விழா பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சவி ஆா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் கலந்து கொண்டு, சிறப்பாகப் பணியாற்றிய ஐந்து வட்டார மருத்துவ அலுவலா்களுக்கு கேடயம் வழங்கினாா். மேலும், விழாவையொட்டி நடத்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இதில், பெருந்துறை ஒன்றியக்குழு துணைத் தலைவா் உமாமகேஸ்வரன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதிசெல்வராஜ், பெருந்துறை வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினா் மற்றும் பெருந்துறை வட்டாரத்தில் ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவக் குழுவினரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT