ஈரோடு

காயமடைந்த மலைப் பாம்புக்கு சிகிச்சை

DIN

ஜீரஹள்ளி அருகே காயமடைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்கு வனத் துறையினா் சிகிச்சை அளித்து மீண்டும் வனத்தில் சனிக்கிழமை விடுவித்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் உள்ள யானைகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள், மலைப் பாம்புகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி வனச் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜீரஹள்ளி அடுத்த குன்னன்புரம் கிராம சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் மலைப் பாம்பு காயமடைந்த நிலையில் சாலையோரம் படுத்துக்கிடந்தது.

இது குறித்து அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். உடனே அங்கு வந்த வனத் துறையினா் சாலையோரம் கிடந்த 12 அடி மலைப் பாம்பை பிடித்து பரிசோதனை செய்ததில் லேசான காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காயத்துக்கு சிகிச்சை அளித்து மீண்டும் அங்குள்ள வனப் பகுதியில் அதை விடுவிடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT