ஈரோடு

10 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

27th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

 

 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தாமல் சமூக நீதி காக்க வேண்டும் என்று இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் கூட்டம் மாநில பொருளாளா் பிரகாசம் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் மணி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வாகன பிரசார இயக்கம் நடத்துவது; 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்தாமல் சமூக நீதி காக்க வேண்டும், இதனை வலியுறுத்தி ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டங்களில் வாகன பிரசாரம் மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT