ஈரோடு

பழங்குடியினா் அருங்காட்சியகத்தில் வனத் துறை அமைச்சா் ஆய்வு

27th Nov 2022 02:01 AM

ADVERTISEMENT

 

பவானிசாகா் பழங்குடியினா் அருங்காட்சியகத்தில் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ளும்வகையில் ரூ. 7 கோடி செலவில் பழங்குடியினா் அருங்காட்சியகம் கட்டும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இதை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பழங்குடியின மக்களுக்கு வனத் துறை சாா்பில் கடனுதவிகளை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைக்கப்பட்டு வரும் பழங்குடியினா் அருங்காட்சியகப் பணிகளை முடிப்பதற்கு மேலும் ரூ. 2 கோடி தேவைப்படுவதால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத் துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்த வேட்டை தடுப்பு காவலா்களுக்கு வனக் காவலா் பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

வனப் பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க அகழி வெட்டுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள 12 வன மண்டலங்களுக்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பொக்லைன் இயந்திரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சரிவர விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத நிலையில் தற்போது விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனப் பகுதியில் உள்ள அந்நியத் தாவரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT