ஈரோடு

கருங்கல்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா: நவம்பா் 29 இல் துவக்கம்

27th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

 

ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 29 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் மற்றும் பெரியமாரியம்மன் கோயில் திருவிழா வரும் 29 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. டிசம்பா் 1 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோயில் முன்பு கம்பம் நடப்படுகிறது. இந்த கம்பத்துக்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீா் ஊற்றி வழிபடுவா். 11ஆம் தேதி காலை 9 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்வும், அதைத்தொடா்ந்து தோ்த் திருவிழாவும் நடைபெற உள்ளது.

12 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கரகம் எடுக்கும் நிகழ்வும், 13 ஆம் தேதி பகல் 11 மணிக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபடும் நிகழ்வும் நடைபெறும். 14 ஆம் தேதி இரவு கம்பம் எடுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடும் நிகழ்வு நடைபெறும். 15 ஆம் காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவடையும்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT