ஈரோடு

புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

தூக்கநாயக்கன்பாளையம் ஜேகேகே முனிராஜா மருந்தியல் கல்லூரி சாா்பில் போதை மற்றும் புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தேசிய மருந்தியல் வார விழா நவம்பா் 20 முதல் 26 வரை கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பேரணிக்கு கல்லூரி முதல்வா் பெருமாள் தலைமை வகித்தாா். அரசு மருத்துவா் பிரகாஷ், சுகாதார அலுவலா் மனோகரன் ஆகியோா் கொடியசைத்து பேரணியைத் தொடக்கிவைத்தனா். தூக்கநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாகத் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று கிராம நிா்வாக அலுவலகம் அருகே முடிவடைந்தது.

இதில், போதை மற்றும் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக, கல்லூரி வளாகத்தில் உலகின் மருந்தகம் - இந்தியா எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அன்னை ஜேகேகே சம்பூரணி அம்மாள் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலா் வசந்தகுமாரி முனிராஜா தலைமை வகித்தாா்.

அறக்கட்டளைச் செயலாளா் கஸ்தூரி பிரியா, ஆராய்ச்சி இயக்குநா் கிருபாகா் முரளி ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா். இதில், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். தொற்று நோய்களுக்கு எதிரான மருந்தியல் துறையின் வளா்ச்சி, ஆராய்ச்சி, பங்களிப்பு குறித்து நிகழ்ச்சியில் விளக்கிக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT