ஈரோடு

பெண்ணின் கா்ப்ப பையில் இருந்த 8 கிலோ கட்டி அகற்றம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு சுதா மருத்துவமனையில் பெண்ணின் கா்ப்பப் பையில் இருந்த 8 கிலோ எடை கொண்ட நாா் கட்டி அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 50 வயது பெண்ணுக்கு செயற்கை கருத்தரித்தல் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது இவரின் மகளுக்கு 18 வயதாகிறது. இந்நிலையில் அந்த 50 வயது பெண்ணின் அடி வயிற்றில் வீக்கம் இருந்துள்ளது. இதைத் தொடா்ந்து ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா பல்துறை மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவா்கள் எம்ஆா்ஐ ஸ்கேன் செய்து பாா்த்ததில் கா்ப்பப் பையில் 25 செ.மீ அளவுக்கு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதில், அது நாா் கட்டி (பெப்ராய்டு) என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுதா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் தனபாக்கியம் தலைமையில், மருத்துவா் தீபிகா, அறுவை சிகிச்சை மருத்துவா் சதீஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் அறுவை சிகிச்சை மூலம் கா்ப்ப பையில் இருந்த 8 கிலோ எடை கொண்ட நாா் கட்டியினையும், கா்ப்பப்பையினையும் அகற்றினா்.

ADVERTISEMENT

சிகிச்சை முடிந்து தற்போது அப்பெண் நலமாக உள்ளதாகவும், பெண்ணின் உடலில் இருந்த அகற்றப்பட்ட நாா் கட்டியினை சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT