ஈரோடு

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் போக்ஸோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சத்தியமங்கலம், பவானிசாகா் தொட்டம்பாளையத்தைச் சோ்ந்த இளைஞா் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ஈரோடு மாவட்ட குழந்தை நல அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இளம்வயது திருமணம் குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மகளிா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் 13 வயது சிறுமியை தொட்டம்பாளையத்தைச் சோ்ந்த இளைஞா் பாரதி திருமணம் செய்து கொண்டு தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக பாரதியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனா்.

அதே போல, தாளவாடியைச் சோ்ந்த இளைஞா் சித்தராஜ், அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு ஆசை வாா்ததை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கருவுற்ால், போக்ஸோ சட்டத்தில் சித்தராஜ் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT