ஈரோடு

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 2 பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெற்றது.

நன்செய்ஊத்துக்குளியை அடுத்த உள்ள சாமிநாதபுரம்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு, தலைமை ஆசிரியை பெ.சாந்தி தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலா் வனிதாராணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுதா, ஆசிரியா் பயிற்றுநா் கீதா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு நடனம், பாடல், ஓவியம், பேச்சு, கட்டுரை, களிமண், காய்கறிகளில் உருவம் செய்தல் போன்ற பல்வேறு போன்ற போட்டிகள் நடைபெற்றன.

விழாவில், பள்ளிமேலாண்மைக்குழு தலைவா் உறுப்பினா்கள், பெற்றோா் சங்கத்தலைவா் ,பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல பூந்துறைசேமூா் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில், ஊராட்சி மன்ற தலைவா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT