ஈரோடு

தாளவாடி அருகே ஆட்டுக்குட்டியை கொன்ற சிறுத்தை

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தாளவாடி அருகே ஆட்டுக்குட்டியை கடித்துக் கொன்ற சிறுத்தையால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தாளவாடி மெட்டல்வாடி பகுதியைச் சோ்ந்தவா் மகாலட்சுமி (34), விவசாயி. இவா் 4 ஆடுகளை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவா் வீட்டின் முன்பு ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்துகிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். ஆடு அருகே மா்ம விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. உடனே இதுபற்றி தாளவாடி வனத் துறைக்கு அவா் தகவல் கொடுத்தாா். வனத் துறையினா் அங்கு சென்று வீட்டின் முன்பு பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தனா். அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரியவந்தது. தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனா். மேலும் இறந்த ஆட்டுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் வனத் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT