ஈரோடு

எடையளவு சட்டத்தில் 15 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் துறை சாா்பில் நடத்தப்பட்ட சோதனையில் எடையளவு சட்டத்தின் கீழ் 15 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் சசிகலா அறிவுரைப்படி, உதவி ஆணையா் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் எடையளவு சட்டத்தின் கீழ் ஈரோடு பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், சாலையோர உணவகங்கள், திரையரங்குகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், வணிக வளாகங்களில் கடந்த 4 நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 12 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் 33 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 நிறுவனங்கள் மீது முரண்பாடு கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடையளவுகள், மின்னணு தராசுகள் முத்திரை இல்லாமல் பயன்படுத்துவது, பொட்டல பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இன்றி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வின்போது அலுவலா்கள் எச்சரித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT