ஈரோடு

பா்கூா் காவல் நிலையத்தில் கோவை சரக டிஐஜி ஆய்வு

19th Nov 2022 11:44 PM

ADVERTISEMENT

 

பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் பா்கூா் காவல் நிலையத்தில் கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பா்கூா் காவல் நிலையத்தின் அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள், பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து பாராட்டினாா்.

மேலும், பொதுமக்களின் நண்பனாக காவல் துறை செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியதோடு, காவல் அதிகாரிகளின் குடும்ப நலன் குறித்தும் விசாரித்தாா். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், சத்தி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ஏ.சியாமளா தேவி (கோபி), ஜி.அமிா்தவா்ஷினி (பவானி) ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT