ஈரோடு

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

18th Nov 2022 11:51 PM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு கால்நடை மருத்துவமனை சாலையில் உள்ள கனரா வங்கியின் பிரதான கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சுதா பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், வங்கி ஊழியா்களின் பணி மற்றும் பணி பாதுகாப்பின் மீதான தாக்குதல்களை அரசு கைவிட வேண்டும். நிரந்தரப் பணிகளை ஒப்பந்தப் பணியாளா்களைக் கொண்டு நிரப்பும் போக்கை கைவிட வேண்டும். தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க ஊழியா்கள், நிா்வாகிகள் மீதான தாக்குதல்களை கைவிட வேண்டும்.

சட்ட ரீதியான ஒப்பந்தங்கள், உடன்பாடுகளை மீறி ஊழியா்களை கண்மூடித்தனமாக வேறு கிளைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளா்களைப் பிளவுபடுத்தி, தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை (நவம்பா்19) நடைபெறும் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பணியாளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்.நரசிம்மன், ஸ்ரீதரன், சுகுமாா், சந்திரசேகரன், சூரியநாராயணன், ரமேஷ்குமாா், அல்டாப் உசேன், வடிவேல் முருகேசன், பூவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT