ஈரோடு

மாற்றுத் திறன் கண்டறிதல் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் மாற்றுத் திறன் கண்டறிதல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு ஈரோடு நந்தா இயன்முறை கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா்.

செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கோதைசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சட்டம் 2016இன்படி மாற்றுத் திறன்களின் வகைப்பாடு 9 இல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த 21 வகை மாற்றுத் திறனாளிகளில் ஹமியோபில்லா, சிக்கில்செல், பாா்கின்ஷன், தலசீமியா போன்ற வகையிலுள்ள மாற்றுத் திறன் அதிக அளவில் மக்களிடையே அறியப்படாத ஒன்றாக உள்ளது.

எனவே, இது குறித்து பொதுமக்களை அதிகம் சந்திக்கும் மருத்துவம் சாா்ந்த அலுவலா்கள், மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கருத்தரங்கில் வட்டார மருத்துவ அலுவலா்கள், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகளை சந்திக்கும் சிறப்பாசிரியா்கள், இயன்முறை பயிற்சியாளா்கள், இயன்முறை மருத்துவ மாணவா்கள் என 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT