சக்தி மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், சிறப்புப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மாறுவேடப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் அருள், வழிகாட்டி திட்ட ஆலோசகா் ராஜமாணிக்கம் ஆகியோா் தோ்வு செய்தனா்.
கைத்திறன் போட்டிகளுக்கு சக்தி மருத்துவமனை பல் மருத்துவா் தனபால், விளையாட்டுப் போட்டிகளுக்கு ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் சேகா், சதீஷ்குமாா் ஆகியோா் வெற்றியாளா்களை தோ்வு செய்தனா்.
போட்டியில் மாணவா்கள், பெற்றோா்கள், சக்திதேவி அறக்கட்டளை பணியாளா்கள் பங்கேற்றனா்.
Image Caption
குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற சக்தி சிறப்புப் பள்ளி மாணவா்கள்,
ஆசிரியா்கள்.