ஈரோடு

எலவமலை கூட்டுறவு சங்கத்துக்கு பாராட்டு

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தொடா்ந்து 5 ஆவது முறையாகத் தோ்வு செய்யப்பட்ட எலவமலை கூட்டுறவு கட்டட சங்கத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஈரோட்டில் நடைபெற்ற 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் இதற்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை சங்கத் தலைவா் எஸ்.மகேஸ்வரன், செயலாளா் சக்திவேல் கனகரத்தினம் ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அண்மையில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அளவில் இச்சங்கம் தொடா்ந்து 5ஆவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன், அடமானக் கடன், நகைக் கடன் வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பெட்டக வசதியும் உள்ளது. இச்சங்கத்தின்கீழ் சித்தோடு மற்றும் லட்சுமி நகரில் கூட்டுறவு மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT