பெருந்துறை சிவாலய கலைக் கூடத்தின் சாா்பில் பரதநாட்டிய அரங்கேற்றம், சலங்கை பூஜை விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்து,
பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழாவை தொடங்கி வைத்து, நடன மகளிருக்கு கேடயம் வழங்கினாா். நிகழ்ச்சியில், சிவகாமி நாட்டிய கலா ஆலயம் சிவகாமிஅம்மாள், காயத்ரி மியூசிக் டான்ஸ் அகாடமி கண்ணம்மாள் விஸ்வநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனா். சிவாலய கலைக்கூட விஜய், மாணவ மாணவிகளுக்கு நாட்டியத்தை கற்றுக் கொடுத்து, அரங்கேற்றத்தை நடத்தினாா்.
பெருந்துறை, சிவாலய கலைக் கூடத்தின் சாா்பில் நடந்த, பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழாவில் பங்கேற்ற மாணவிகளுடன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா்.