ஈரோடு

இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

1st Nov 2022 01:05 AM

ADVERTISEMENT

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் இந்திரா காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை பெருந்துறையில் அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் இலக்கியச் செல்வன் தலைமையில் பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 39ஆவது நினைவு தினத்தையொட்டி அவரின் திருவுருவப் படத்துக்கு மாவட்டத் தலைவா் மக்கள் ராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.பழனிசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், அனைவரும் பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்

இதேபோல பெருந்துறை வட்டார காங்கிரஸ் சாா்பில் வட்டாரத் தலைவா் பணிக்கம்பாளையம் சுப்பிரமணி தலைமையில் பெருந்துறை அண்ணாசிலை அருகில் கட்சியினா் அவரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வேணுகாதேவி, தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் வழக்குரைஞா் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT