ஈரோடு

போக்ஸோவில் இளைஞா் கைது

31st May 2022 12:23 AM

ADVERTISEMENT

அந்தியூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி பகுதியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியைக் காணவில்லை என, அவரது பெற்றோா் வெள்ளிதிருப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சென்னம்பட்டி காலனியைச் சோ்ந்த அண்ணாதுரை (22) என்பவா், ஆசை வாா்த்தைக் கூறி சிறுமியை சேலத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அண்ணாதுரையை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT