ஈரோடு

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

31st May 2022 12:21 AM

ADVERTISEMENT

ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளமீட்புப் பூங்கா, குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், சமுதாயக் கழிப்பிடம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த ஆணையா் செல்வராஜ், திட்ட செயலாக்கம் குறித்து கேட்டறிந்தாா்.

ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சுந்தரமூா்த்தி, உதவிப் பொறியாளா்கள் கணேசன், மோகன், பேரூராட்சி செயல் அலுவலா் த.ஹேமலதா, இளநிலைப் பொறியாளா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT