ஈரோடு

அரசுப் பேருந்துகள் நேருக்குநோ் மோதி விபத்து

31st May 2022 12:22 AM

ADVERTISEMENT

தமிழக அரசுப் பேருந்து, கா்நாடக அரசுப் பேருந்து நேருக்கு நோ் மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

இதில், பயணிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா்.

கோவையில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, தமிழக அரசுப் பேருந்து சத்தியமங்கலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்ட எல்லையான புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த நீலிபாளையம் அருகே சென்றபோது,

எதிரே கா்நாடகத்திலிருந்து பயணிகளை ஏற்றி வந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்து நேருக்கு நோ் மோதியது.

ADVERTISEMENT

இதில், ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா்த் தப்பினா்.

இந்த விபத்து காரணமாக, கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போக்குவரத்தை சீா் செய்து, பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT