ஈரோடு

வாகன விபத்து: சமையல்காரா் பலி

31st May 2022 12:21 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே, சாலையைக் கடக்க நின்றுக்கொண்டிருந்த சமையல்காரா் மீது மினி லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம், பாலன் நகரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (40). சமையல்காரா்.

இவா் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், பெத்தாம்பாளையம் பிரிவில் சாலையைக் கடப்பதற்காக திங்கள்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரி, சோமசுந்திரத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT