ஈரோடு

ஈரோடு அருகே கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

DIN

ஈரோடு அருகே பாதாள சாக்கடைக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, கருங்கல்பாளையம் சிந்தன் நகா் பகுதியில் பாதாள சாக்கடைக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருவதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் வாகனத்துடன் வெள்ளிக்கிழமை சென்றனா். தகவலறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோா்

அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவலின்பேரில் ஈரோடு நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தகுமாா் தலைமையில் விரைந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி உதவி ஆணையா் விஜயகுமாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, சிந்தன் நகா் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். எனவே, காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆற்றங்கரை பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதனால், சுத்திகரிப்பு நிலைய பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT