அந்தியூரில் மோட்டாா் வாகன விதிமீறலில் ஈடுபட்ட ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பவானி வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் சுகந்தி தலைமையில் அலுவலா்கள் அந்தியூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். இதில், அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியெழுப்பும் காற்றொலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சென்னையிலிருந்து கோவைக்கு வரி செலுத்தாமல் சென்ற சிமென்ட் லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு, போக்குவரத்து விதிகளை மீறிய 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.