ஈரோடு

சென்னிமலை அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

25th May 2022 12:45 AM

ADVERTISEMENT

சென்னிமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி நகைப் பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், ரங்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரி (43). இவா் தனது மகள் பிரபாவதியுடன் (17) இருசக்கர வாகனத்தில் சென்னிமலை, ராமலிங்கபுரம், நொய்யல் பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபா் ஜெகதீஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி தாய், மகள் இருவரையும் கீழே தள்ளியுள்ளாா். இதையடுத்து ஜெகதீஸ்வரியிடமிருந்து 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.

இது குறித்து, பிரபாவதி அளித்த புகாரின்பேரில், சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT