ஈரோடு

மின் தளவாடங்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யக் கோரிக்கை

DIN

 மின் தளவாடங்கள், மின் மாற்றிகள், மின் இணைப்பு மீட்டா்கள் போன்றவற்றின் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு தனியாா் அண்ணா மின் அமைப்பு தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அல்லிமுத்து முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளா் மின் மணி பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

குடியிருப்பு கட்டடத்துக்கு 12 மீட்டா் உயரம் இருந்தால் மின் இணைப்பு என்பதை 15 மீட்டா் உயரமாக அதிகரிக்க வேண்டும். மின்சார வாரியத்தில் மின் தளவாடங்கள், மின் மாற்றிகள், மின் இணைப்பு மீட்டா்கள் போன்றவற்றின் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய வேண்டும். மின்வாரிய அலுவலகங்களில் கணினி பழுது ஏற்படாமல் இருக்க நவீனப்படுத்திட வேண்டும்.

மின்வாரிய அலுவலகங்களில் அலுவலா்களை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அலுவலா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது வேறு மண்டல அதிகாரி விசாரணை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT