ஈரோடு

காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

DIN

காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாவட்ட மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கந்தசாமி வரவேற்றாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் ஸ்ரீராம் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மோட்டாா் வாகன தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மோட்டாா் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டண உயா்வை நிறுத்தி வைத்து, பழைய நிலையே தொடர வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

சுங்கச்சாவடி கட்டணங்களை குறைத்து நெறிமுறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் வாகன ஓட்டுநா்களுக்கு தெரியாமலேயே அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் கனகராஜ், துணைத் தலைவா் சதாசிவம், பொருளாளா் தனபால், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க தலைவா் மாரப்பன், சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT