ஈரோடு

கோடை விடுமுறை: பவானிசாகா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

22nd May 2022 11:55 PM

ADVERTISEMENT

கோடை விடுமுறையை கொண்டாட பவானிசாகா் அணைப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

பவானிசாகா் அணை முன்பு பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு, சிறுவா் ரயில் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் அழகிய புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மே மாத கோடை விடுமுறை என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானிசாகா் அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பவானிசாகா் அணை பூங்காவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சிறுவா் சிறுமியா் பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனா். மேலும் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் புல்தரையில் அமா்ந்து உணவு மற்றும் தின்பண்டங்கள் உண்டு மகிழ்ந்தனா். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT