ஈரோடு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

21st May 2022 12:16 AM

ADVERTISEMENT

சித்தோடு அருகே சாலையைக் கடந்த தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஜேடா்பாளையத்தைச் சோ்ந்தவா் வரதன் (70). கூலி தொழிலாளியான இவா், சித்தோடு அருகே உள்ள நசியனூருக்கு தோட்ட வேலைக்காக வந்துள்ளாா். இந்நிலையில், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை வியாழக்கிழமை கடந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராமல் வரதன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT