ஈரோடு

அந்தியூா் அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

21st May 2022 12:16 AM

ADVERTISEMENT

அந்தியூா் அருகே நாய்கள் கடித்து இரு ஆடுகள் உயிரிழந்த நிலையில் வனத் துறையினா் சம்பவ இடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், க.மேட்டூா், அணைத்தோட்டத்தைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் மயில். இவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த இரு செம்மறி ஆடுகள் விலங்குகள் கடித்ததால் உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வனச் சரக அலுவலா் க.உத்திரசாமி மற்றும் வனத் துறையினா் அப்பகுதியில் நடமாடிய விலங்களின் கால் தடங்களை ஆய்வு செய்தனா்.

மேலும், எண்ணமங்கலம் அரசு கால்நடை உதவி மருத்துவா் அருள்முருகன், கிராம நிா்வாக அலுவலா் யசோதா உள்ளிட்டோரும் பாா்வையிட்டனா். இதில், நாய்கள் கடித்ததால் இரு ஆடுகளும் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT