ஈரோடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை:போக்ஸோவில் ஓட்டுநா் கைது

21st May 2022 12:16 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, ஞானிபாளையம், கலைஞா் நகரைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் (44). காா் ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில் 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாக்யராஜ் வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரணை நடத்தியதில் பாக்கியராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாக்யராஜைக் கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT