ஈரோடு

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

21st May 2022 12:15 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிற்பகலில் சத்தியமங்கலம் நகா்ப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.

மழையின் காரணமாக சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். வனப் பகுதியிலும் மழை பெய்து வருவதால் வன விலங்குகளின் குடிநீா் பிரச்சினைக்குத் தீா்வு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT