ஈரோடு

வீடுகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

16th May 2022 07:26 AM

ADVERTISEMENT

 

 ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மூலப்பாளையம் விநாயகா் கோயில் 3ஆவது வீதியைச் சோ்ந்தவா் முனுசாமி. கட்டட மேஸ்திரி. குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.30,000 மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதேபோல மூலப்பாளையம் விநாயகா் கோயில் 3ஆவது வீதியைச் சோ்ந்தவா் துரைராஜ். ஓய்வுபெற்ற பொதுப் பணித் துறை ஊழியா். இவரும் தனது குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்த நிலையில் பூட்டை உடைத்து ரூ.50,000 மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ADVERTISEMENT

இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மூலப்பாளையம் பகுதியில் தொடா்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இரவு நேரங்களில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT